J.I.U உறுப்பினராக 35 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வெற்றி

25.11.2011

India won Joint Inspection Unit (JUI) member after 35 years
ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு அமைப்புகளில் சக்தி வாய்ந்த அமைப்பாக கூட்டு ஆய்வு குழுவாக (Joint Inspection Unit) திகழ்கிறது. J.I.U என்பது உறுப்பு நாடுகளின் நிதி விவகாரங்கள் தொடர்பான ஆய்வுக் குழுவாகும். ஐ. நா. சபையின் இந்த தேர்தலில் சீனாவை இந்தியா தோற்கடித்தது. 11 பேர்களை கொண்ட இந்த குழுவுக்கான தேர்தலில் ஆசிய பிராந்தியம் சார்பாக இந்தியாவும், சீனாவும் முதல் முறையாக நேரடியாக மோதின. இந்தியா சார்பில் கோபிநாதனும், சீனா சார்பில் இந்தியாவுக்கான சீன தூதர் ஜாங்யனும் போட்டியிட்டனர்.

உலகின் 2வது பெரிய பொருளாதார நாடான சீனாவுடன், இந்தியா நேரடியாக மோதியதால் இத்தேர்தல் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. உச்சக்கட்ட பரபரப்புக்கு இடையே நடந்த தேர்தலில் 183 வாக்குகள் பெற்று இந்தியா வெற்றி பெற்றது. சீனா 77 வாக்குகள் பெற்றது. 5 ஆண்டு பதவிக்காலம் உடைய இந்த பதவியை 2013 ஜனவரியில் கோபிநாதன் ஏற்பார்.

தற்போது ஆசியா சார்பில் இதில் அங்கம் வகிக்கும் சீனாவின் பதவிக்காலம் 2012 டிசம்பர் 31ல் முடிவுக்கு வருகிறது. கடந்த 35 ஆண்டுகளுக்குப்பின் இந்தியா இந்த தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 1968-77ல் இதன் உறுப்பினராக இருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் J.I.U.வில் இந்தியா இடம் பெறுவது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 
Free adiyakkamangalam.com adsense Free abudhabiadz.com adsense Free dubaiassets.com adsense
Free betamil.com adsense Free chennaiclassify.com adsense Free dubaiadz.com adsense
Free indiaassets.com adsense Free malaysiaadz.com adsense Free abudhabiassets.com adsense
Free sgclassify.com adsense Free qatarassets.com adsense Free classifiedsense.com adsense