10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய முதலைகள் - ஆய்வறிக்கை

18.11.2011

ஆப்ரிக்காவின் வடமேற்கு நாடான மொராக்கோவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு முதலை போன்ற விலங்கின் மண்டை ஓடு மற்றும் படிமங்கள் கிடைத்தன. இவை தற்போது கனடாவின் ஆன்டாரியோ நகரில் உள்ள ராயல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இது பற்றி விலங்கியல் ஆராய்ச்சியாளர் நிக் கார்டனர் விரிவான ஆய்வை மேற்க்கொண்டார்.

இந்த எலும்புக்கூடுகள் 9.9 கோடி ஆண்டுகள் பழமையானது, அதற்கு முந்தைய காலத்தை டைனோசர் காலம் என்று தான் ஆராய்ச்சியாளர்கள் பொதுவாக குறிப்பிடுவார்கள். அந்த காலகட்டத்தில் டைனோசர்கள் போல முதலை வகையை சேர்ந்த ஷீல்டு குரோக் விலங்கினங்களும் அதிகம் இருந்துள்ளன. இவற்றின் மண்டை ஓடு தட்டையாக இருந்திருக்கிறது. அது கவசம் போல பாதுகாப்பாக இருந்ததால் ஷீல்டு குரோக்கோடைல் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இவை தற்போதைய முதலையின விலங்குகளின் மூதாதை விலங்குகள் ஆகும். ஷீல்டு குரோக் படிமங்கள் கண்டெடுக்கப்பட்ட மொராக்கோ அருகே, மத்திய தரைக்கடல் பகுதியில்தான் முதலை இனம் முதன்முதலில் தோன்றியதாக நம்பப்படுகிறது.

 
Free chennaiclassify.com adsense Free malaysiaadz.com adsense Free classifiedsense.com adsense
Free abudhabiadz.com adsense Free betamil.com adsense Free sgclassify.com adsense
Free dubaiadz.com adsense Free dubaiassets.com adsense Free abudhabiassets.com adsense
Free qatarassets.com adsense Free indiaassets.com adsense Free adiyakkamangalam.com adsense