15 நிமிடத்தில் எய்ட்ஸ் நோயை கண்டறியும் மிகச் சிறிய சிப்

13.08.2011

Tiny chip diagnose HIV in 15 minutes
நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எச்.ஐ.வி நோய் பாதித்துள்ளதா எனக் கண்டறியும் சிப் ஒன்றை வடிவமைத்துள்ளனர். தற்போதைய சோதனை முறையில் எச்.ஐ.வி பாதிப்பை கண்டறிய ரத்ததை சோதனை மையத்தில் கொடுத்து விட்டு பல நாட்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் இந்த சிப்பின் மூலம் பரிசோதனைக்கு ரத்தம் கொடுத்த 15 நிமிடத்தில் எய்ட்ஸ் நோய் பாதிப்பை அறிய முடியும்.

இது கிரடிட் கார்டு போன்று இருக்கும், இதற்கு எம் சிப் (mChip) எனறு பெயர். அதில் ரத்தம் செலுத்துப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது. இதன் மூலம் எய்ட்ஸ் நோய் மட்டுமின்றி மற்ற பால்வினை நோய்கள் பாதித்துள்ளதா எனவும் விரைவாகவும் துள்ளியமாகவும் தெரிந்து கொள்ளலாம்.

கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கிசாலி, சுவாண்டா நகரங்களில் இந்த எம் சிப் மூலம் எய்ட்ஸ் பரிசோதனை நடத்தினார்கள். அதில் துள்ளியமாக எச். ஐ. வி பாதிக்கப்பட்டவர்களை காட்டிக்கொடுத்தது.. இந்த ஒரு சிப்பின் விலை சுமார் ரூ.45 தான் இருக்கும். இதை எங்கும் எளிதாக எடுத்து செல்ல முடியும். இந்த பரிசோதனையை கர்ப்பிணி பெண்களிடம் நடத்த ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

 
Free adiyakkamangalam.com adsense Free abudhabiadz.com adsense Free malaysiaadz.com adsense
Free qatarassets.com adsense Free chennaiclassify.com adsense Free abudhabiassets.com adsense
Free sgclassify.com adsense Free dubaiadz.com adsense Free dubaiassets.com adsense
Free classifiedsense.com adsense Free betamil.com adsense Free indiaassets.com adsense