பூமியின் சுற்றுப் பாதையில் சுற்றும் விண்கற்கள்

27.12.2011

Asteroids around the earth
2006ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு ஜூன் வரை ஒரு தற்காலிக துணைக்கோள் சுற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006ம் ஆண்டில் ஒரு மீட்டர் நீளம் கொண்ட ஆஸ்ட்ராய்டு எனப்படும் ஒரு விண்கல் பூமியை சுற்றி வந்தது. இது ஏதாவது ஒரு செயற்கைகோளின் சிதைந்த பாகமாக இருக்கலாம் என்றே ஆரம்பத்தில் விஞ்ஞானிகள் கருதினர். ஆனால் அதை தெளிவாக ஆராய்ந்த போது அது ஒரு விண்கல் என்பது தெரியவந்தது.

பூமியின் ஈர்ப்பு விசையால் தற்காலிகமாக இழுக்கப்பட்டு, பூமியின் சுற்றுப் பாதைக்குள் வந்த அந்த விண்கல் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் பூமியை சுற்றிவிட்டுச் சென்றுள்ளது. இதுகுறித்து ஆய்வு நடத்திய அமெரிக்காவின் கார்ன்வெல் பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வாளர்கள், இது போல எத்தனையோ விண்கற்கள் பூமியை சுற்றி வருவதாகவும், பூமிக்கு ஒரு துணைக் கோள் சந்திரன் தான் என்று சொல்வது தவறு என்றும் கூறுகின்றனர்.

 
Free sgclassify.com adsense Free classifiedsense.com adsense Free dubaiassets.com adsense
Free chennaiclassify.com adsense Free qatarassets.com adsense Free betamil.com adsense
Free abudhabiassets.com adsense Free indiaassets.com adsense Free abudhabiadz.com adsense
Free adiyakkamangalam.com adsense Free dubaiadz.com adsense Free malaysiaadz.com adsense