புதிய வைர கிரகங்கள் கண்டுபிடிப்பு

09.12.2011

Planet discovered with thousands of tons diamonds
அமெரிக்காவை சேர்ந்த ஒஹியோ மாநில பல்கலைக்கழக புவியியல் துறை விஞ்ஞானிகள் பூமியை விட 15 மடங்கு பெரிய பல ஆயிரம் டன் வைரங்களுடன் கூடிய புதிய கிரகங்களை சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். கார்பன் எனப்படும் கரிய தாதுக்கள் பூமிக்கடியில் அதிக அழுத்தத்தில் இருக்கும் போது ஒளிரும் தன்மை பெறுகின்றன. அவைதான் வைரமாக வெட்டி எடுக்கப்பட்டு விலை மதிப்புமிக்க பொருளாக கருதப்படுகின்றன. இத்தகைய கார்பன் படிமங்களை அதிகம் கொண்ட கிரகங்கள் சூரிய மண்டலத்தை சுற்றிலும் ஏராளமாக இருப்பதாக பல்கலைக்கழக புவியியல் துறை ஆராய்ச்சி குழு தலைவர் வெண்டி பனேரோ தெரிவித்துள்ளார்.

பூமியைவிட 15 மடங்கு பெரிய கிரகங்கள் சூரிய மண்டலத்தில் காணப்படுகின்றன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட பரப்பு வைர படிமங்களை கொண்டிருக்கலாம். காற்று இல்லாததால் உயிரினங்கள் வசிக்க வாய்ப்பில்லாத இந்த கிரகங்கள் பல ஆயிரம் கோடி டன்களாக இருக்கும். அதிக வெப்பம் கொண்ட இந்த கிரகங்களின் கார்பன் படிமங்களில் பெரும்பாலானவை வைரமாக இருக்க வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.

 
Free betamil.com adsense Free classifiedsense.com adsense Free dubaiassets.com adsense
Free malaysiaadz.com adsense Free qatarassets.com adsense Free adiyakkamangalam.com adsense
Free abudhabiassets.com adsense Free sgclassify.com adsense Free chennaiclassify.com adsense
Free abudhabiadz.com adsense Free indiaassets.com adsense Free dubaiadz.com adsense