ஐந்து கோடி ஆண்டுகளில் அனைத்து கண்டங்களிலும் மாற்றம் - ஆய்வறிக்கை

13.02.2012

Changes will happen in continents by five million years
உலகில் உள்ள ஏழு கண்டங்களும் கடல்களால் சூழப்பட்டுள்ளன. அவை நீர் மற்றும் காற்று போக்கால் இழுத்து ஒன்றுடன் ஒன்று மோதும் சூழ்நிலை உருவாக உள்ளது. அதன் மூலம் அமாசியா என்ற ஒரு மிகப்பெரிய புதிய கண்டம் உருவாகும் என புவியியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களின் வடக்கு பகுதி நீர் மற்றும் காற்றுப்போக்கினால் இணையும் வாய்ப்பு உள்ளதாகவும், இதனுடன் ஆர்டிக்கடலும், கரீபியன் கடலும் ஒன்றாக சோ்ந்து புதிய கண்டம் உருவாகும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வு இன்னும் ஐந்து முதல் இருபது கோடி ஆண்டுகளுக்குள் உருவாகும் என அமெரிக்காவின் யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியல் நிபுணர்கள் மேற்கொண்ட ஒரு ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

மேலும் பூமியின் அடியில் உள்ள தட்டுகள் தற்போது நகர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்களின் வடக்கு முனை பூமி தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதி நொறுங்கும் அபாயம் உள்ளது. அதுபோன்ற மாற்றங்களினால் ஆஸ்திரேலியா கண்டம் இந்தியாவுடன் இணைய வாய்ப்பு உள்ளதாகவும் யாழ் பல்கலைக்கழக புவியியல் நிபுணர் ரோல் மிட்செல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 
Free chennaiclassify.com adsense Free dubaiadz.com adsense Free adiyakkamangalam.com adsense
Free indiaassets.com adsense Free classifiedsense.com adsense Free dubaiassets.com adsense
Free malaysiaadz.com adsense Free qatarassets.com adsense Free betamil.com adsense
Free sgclassify.com adsense Free abudhabiassets.com adsense Free abudhabiadz.com adsense