வாய் உமிழ் நீர் மூலம் சர்க்கரையின் அளவை அறியலாம் - ஆய்வறிக்கை

12.02.2012

Saliva test to catch early diabetes
அமெரிக்காவின் ரோட் ஐலேண்ட் மாநில தலைநகர் பிராவிடன்ஸ் நகரில் உள்ளது பிரவுன்ஸ் பல்கலைக்கழகம். இங்கு டொமினிகா பசிபிசி என்ற பேராசிரியர் தலைமையில் சமீபத்தில் சர்க்கரை நோய் தொடர்பான ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பல கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு பழக்கம், உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் பலரும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஊசி மூலம் ரத்தம் எடுத்து பரிசோதனை செய்வதே சர்க்கரை நோய் அளவை தெரிந்து கொள்ளும் வழியாக உள்ளது.

ரத்தத்தின் மூலம் தெரிந்துக்கொள்வதற்க்கு பதிலாக உமிழ் நீரில் (எச்சிலில்) உள்ள குளுக்கோஸ் மூலமாகவே சர்க்கரை அளவை தெரிந்து கொள்ள முடியும். எச்சிலில் எவ்வளவு குளுக்கோஸ் இருக்கிறது என்பதை அறியும் அதிநவீன சென்சார் கருவியை உருவாக்கும் ஆய்வு தீவிரமாக நடந்து வருகிறது. நானோ தொழில்நுட்பம், சர்ஃபேஸ் பிளாஸ்மோனிக்ஸ் தொழில்நுட்பமும் இணைந்ததாக இது அமையும். ரத்தத்தில் உள்ள குளுக்கோசைவிட எச்சிலில் உள்ள குளுக்கோஸ் 10 மடங்கு குறைவாக இருக்கும். ஆனாலும் அதையும் துல்லியமாக கணக்கிடும் வகையில் சென்சார் உருவாக்கப்படும் என்றார்.

 
Free qatarassets.com adsense Free dubaiadz.com adsense Free betamil.com adsense
Free malaysiaadz.com adsense Free abudhabiadz.com adsense Free dubaiassets.com adsense
Free abudhabiassets.com adsense Free adiyakkamangalam.com adsense Free chennaiclassify.com adsense
Free indiaassets.com adsense Free sgclassify.com adsense Free classifiedsense.com adsense