சமையல் / காரம் வகை

போண்டா (Bonda)

 (சைவம்)
தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 1/2 கோப்பை
கடலை மாவு - 1/4 கிலோ
வெங்காயம் - 1 கோப்பை
கேரட் - 1/2 கோப்பை
பீன்ஸ் - 1/2 கோப்பை
முட்டைக்கோஸ் - 1/2 கோப்பை
கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லித்தழை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
கேசரி பவுடர் - 2 சிட்டிகை
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 1/2 லிட்டர்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடலை மாவையும், அரிசி மாவையும் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

இதில் நறுக்கிய காய்கறிகள், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, பெருங்காயம், கேசரி பவுடர், சீரகம், உப்பு, ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை உருளையாக எடுத்து போடவும்.

போண்டா பொன்னிறமாக வெந்ததும் எடுத்து வடிதட்டில் வைத்து எண்ணெய் வடிந்ததும் சூடாக பரிமாறவும்.

கவனிக்க வேண்டியவை:

மாவைக் கலந்தவுடன் போண்டா செய்ய வேண்டும். அப்போதுதான் போண்டா எண்ணெய் குடிக்காது. எண்ணெய் சரியாக சூடாகாமல் போண்டா போட்டாலும் எண்ணெய் குடிக்கும். போண்டாவுக்கு தொட்டுக்கொள்ள ஏதாவது ஒரு சட்டினி வகை செய்தால் சுவையாக இருக்கும்.

இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 
 
Free abudhabiassets.com adsense Free sgclassify.com adsense Free adiyakkamangalam.com adsense
Free betamil.com adsense Free qatarassets.com adsense Free dubaiadz.com adsense
Free abudhabiadz.com adsense Free malaysiaadz.com adsense Free chennaiclassify.com adsense
Free classifiedsense.com adsense Free indiaassets.com adsense Free dubaiassets.com adsense