சமையல் / இனிப்பு வகை

பொரி உருண்டை (Pori Urundai)

 (சைவம்)
தேவையான பொருட்கள்:

வெள்ளைப் பொரி - 250 கிராம்
நாட்டு சர்க்கரை (வாவனா வெல்லம்) - 200 கிராம்
ஏலக்காய் - 4 (பொடி செய்தது)

செய்முறை:

வெள்ளைப் பொரியை வெறும் வாணலியில் போட்டு அடுப்பை குறைந்த தணலில் வைத்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.

வெல்லத்தை நன்றாக உடைத்து 1/4 டம்ளர் அல்லது வெல்லம் மூழ்கும் வரை மட்டும் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும்.

பாகு லேசான கம்பி பதம் வந்ததும் ஏலக்காய் பொடி சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்க வேண்டும்.

இறக்கி வைத்த வெல்லப் பாகில் வறுத்த பொரியைப் போட்டு நன்றாக கிளறவும்.

வெல்லப்பாகு சூடு ஆறுவதற்குள் பொரி கலவையை தேவையான அளவு உருண்டையாக பிடிக்கவும். சூடு ஆறினால் உருண்டை பிடிக்க வராது. அப்படி சூடு ஆறிவிட்டால் மீண்டும் அடுப்பில் லேசான தீயில் வைத்து, லேசாக கிளறி அடுப்பிலிருந்து இறக்கி வைத்து, மீண்டும் உருண்டை பிடிக்கலாம்.

பின் குறிப்பு:

பொரியை வறுக்கும் போது அடுப்பு தீயை வேகமாக வைத்தால் பொரி சுருங்கி கெட்டித்து விடும். பாகு காய்ச்சும் போது தண்ணீர் அதிகமாக சேர்க்கக் கூடாது. தண்ணீர் அதிகமானால் பொரியில் மொருமொருப்பு இருக்காது. கம்பி பாகு என்பது சர்க்கரைப் பாகை ஆள்காட்டி விரல் மற்றும் பெருவிரலினால் எடுத்து விரலைப் பிரித்தால், இரு விரல்களுக்கிடையே ஒரு கம்பி போல் வரும்.

இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 
 
Free malaysiaadz.com adsense Free qatarassets.com adsense Free classifiedsense.com adsense
Free sgclassify.com adsense Free indiaassets.com adsense Free dubaiassets.com adsense
Free abudhabiassets.com adsense Free dubaiadz.com adsense Free betamil.com adsense
Free abudhabiadz.com adsense Free adiyakkamangalam.com adsense Free chennaiclassify.com adsense